பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் விலகியுள்ள நிலையில், இதற்கு பிரபல ரிவி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் வருடம்தோறும் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக் பாஸிற்கு எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது 7 சீசன் முடிவடைந்த நிலையில், விரைவில் எட்டாவது சீசன் ஆரம்பமாக உள்ளது. கடந்த வருடத்துடன் முடிந்த 7 சீசன்களிலும் நடிகர் கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
ஆனால் திடீரென அந்நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் இடத்திற்கு வரும் பிரபலம் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகமாக வலம்வந்து கொண்டிருக்கின்றது. எனினும் ரம்யாகிருஷ்ணன், சிம்பு, சரத்குமார், விஜய் சேதுபதி இவர்களில் யாராவது வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடனும் இருக்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியது பற்றி பிரபல டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், 7 ஆண்டுகளாக ஈடு இணையில்லாத பங்களிப்பை கொடுத்த கமல் சாருக்கு நன்றி.
பார்வையாளர்களிடம் மட்டுமின்றி போட்டியாளர்களிடமும் பேசி அவர்களிடமிருந்த சிறந்ததை வெளிக்கொண்டு வந்தீர்கள். இதனால் தான் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி முதல் இடத்தில் இருக்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து பிரேக் எடுப்பதாக நீங்கள் அறிவித்திருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இருந்தாலும் உங்களின் காரணங்களை மதிக்கிறோம், உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்.
நீங்கள் இல்லாதபிக்பாஸை மிஸ் பண்ணுவோம், ஆனால் ஒரு தொகுப்பாளராக நீங்கள் விட்டுச்சென்ற மரபு என்றென்றும் எங்களை ஊக்குவிக்கும்.
உங்களின் சினிமா வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்… இந்த பிக் பாஸ் சீசனையும் மிகவும் வெற்றியாக தொடர்ந்து நடத்துவோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற விபரத்தை பிரபல ரிவி வெளியிடவிலலை.