புதன் தனது சொந்த ராசியில் நுழைவதால் பத்ர ராஜயோகம் உருவாகவுள்ள நிலையில், இதனால் அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசியினரை தெரிந்து கொள்வோம்.
புதன்
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன், குறுகிய நாட்களில் தனது ராசியை மாற்றக்கூடியவர் ஆவார்.
புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக இருக்கும் இவர் புதன் மற்றும் க்னனி ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் இவர், செப்டம்பர் மாதத்தில் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் சில ராசிகளுக்கு ராஜயோகத்தினை பெறும் நிலையில், அந்த ராசியினர் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கன்னி
கன்னி ராசியில் முதல் வீட்டில் பத்ர ராஜயோகம் உருவாகவுள்ள நிலையில், இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படுவதுடன், திடீர் நிதி ஆதாயங்களும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பதுடன், அலுவலகத்திலும் செயல்திறன் மேம்படும்.
தனுசு
தனுசு ராசியில் 10வது வீட்டில் பத்ர ராஜயோகம் உருவாகவுள்ளதால், புதிய வருமான வழிகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைப்பதுடன் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் தேடி வரும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்
சிம்மம்
சிம்ம ராசியில் 2வது வீட்டில் பத்ர ராஜயோகம் உருவாகவுள்ள நிலையில், செப்டம் மாதத்தில் அதிர்ஷ்டம் அடிப்பதுடன், வேலையிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையும் வலுப்பெற்று, சமூகத்தில் உங்களது நிலையும் உயரும்.