சினிமாவை விட்டு என்றோ விலகி இருப்பேன் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

பேட்டி

சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், “நான் சினிமாவை விட்டு என்றைக்கோ விலகி இருப்பேன், நான் இருப்பதற்கு காரணம் என் மனைவி தான், அவர் சம்பாதித்த பணத்தில் வீடு வாங்கலாம் என்று கூறாமல் படம் தயாரிக்கலாம் என்றார். கொட்டுக்காளி படத்தை தயாரிக்க முக்கிய காரணம் அவர் மனைவி தான்”

“அவர் கூறிய வார்த்தைக்கு கட்டுப்பட்டு தான் நான் கொட்டுக்காளி படத்தை தயாரித்தேன். மேலும் அந்த படத்தை தயாரித்தது எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.