சூரியின் கொட்டுக்காளி திரைப்பட முதல் விமர்சனம்!

விடுதலை முதல் பாகம் படத்திற்கு பின் சூரி கதையின் நாயகனாக தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கருடன் படத்தில் மாஸ் ஹீரோவாகவும் நடித்து அசத்தினார்.

நகைச்சுவை நடிகராக இருந்த சூரி தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனாக மாறியுள்ளது பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மக்கள் மனதை தொடும் கதைகளை தேர்ந்தெடு நடித்து வரும் சூரியின் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் கொட்டுக்காளி.

கூழாங்கல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பி.எஸ். வினோத் ராஜ் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் தயாரிக்க, மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த கொட்டுக்காளி படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
வருகிற 23ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், Press ஷோவில் படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த விமர்சனத்தில் :
கதாநாயகன் சூரி மிகவும் கடுமையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதாகவும், கதாநாயகி அன்னா பென் நடிப்பு சூப்பர் என்றும் தெரிவித்துள்ளனர். நம் சமூகத்தில் பெண்களின் மீதான ஒடுக்குமுறையை குறித்து இப்படம் பேசியுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் இயக்குனர் வினோத் ராஜ் கொட்டுக்காளி படத்தின் மூலம் உலகத்தர சினிமாவை தமிழ் திரையுலகிற்கு கொண்டு வந்துள்ளார் என கூறியுள்ளனர்.