நேற்று இந்தியா முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில், தனது தங்கை போட்டோவை பகிர்ந்த நடிகை ராஷ்மிகா இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ராஷ்மிகா
கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் அவர் நடித்த படங்கள் பெரிதாக போகாத நிலையில், தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார்.
இதன் பின்னர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்தார்.
இப்படி நடிப்பில் பிஷியாக இருக்கும் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்திலும் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் மதன் மந்தனா சுமன் மந்தனா தம்பதியின் மூத்த மகளான நடிகை ராஷ்மிகாவிற்கு உடன் பிறந்த குட்டி தங்கை ஒருவர் உள்ளார் என்பது பலருக்கும் தெரியாது.
இந்தியா முழுவதும் நேற்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில், தனது தங்கையின் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரஷ்மிகா தங்கை மீதான தனது அளவற்ற அன்பையும், காதலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் னது தங்கையை விட நடிகை ராஷ்மிகா 17 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கையுடன் ராஷ்மிகாவின் அழகிய போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.