முதல் நாள் சூரியின் கொட்டுக்காளி படம் செய்துள்ள வசூல்..

கொட்டுக்காளி
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கொட்டுக்காளி. இந்த படத்தில் நடிகர் சூரி மற்றும் அன்னா பென் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் ஏற்கனவே இயக்கிய கூழாங்கல் படம் பல விருதுகளை பெற்றதால் கொட்டுக்காளி படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில், நேற்று ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸுக்கான படமில்லை என்றும் கூறி வருகின்றனர்.

வசூல்
ஆனால் இந்த படத்தில் சூரியின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருந்தது. இந்த நிலையில், முதல் நாள் இந்த படம் ரூ.45 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.