நீண்ட மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை பெறுவதற்கு ரோஸ்மேரி எண்ணெய் பயன்பாடு சிறந்த வழி எனக்கூறலாம்.
ரோஸ்மேரி என்பது இயற்கை அழகு சிகிச்சைகளில் ஒரு சிறந்த வழி அத்தோடு இது முடி பராமரிப்புக்காக அறியப்படுகிறது.
ரோஸ்மேரி எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் சில மாதங்களில் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியைப் பெறலாம்.
தேங்காய் எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயைக் கலக்கவும்.
அதை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடி மீது தடவவும்.
மெதுவாக மசாஜ் செய்து குறைந்தது ஒரு மணி நேரம் அல்லது ஒரே இரவிற்கு அப்படியே விடவும்
அத்தோடு, இரண்டு தேக்கரண்டி புதிய கற்றாழை ஜெல்லுடன் மூன்று தொடக்கம் நான்கு சொட்டு ரோஸ்மேரி எண்ணெயை கலக்கவும்.
கலவையை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும் மற்றும் வேர்களுக்கும் தடவவும்.
இவ்வாறு, 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விட்டு பின்னர் தண்ணீரில் நன்கு கழுவவும்.
இது உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரியும் உணர்வைக் குறைக்கும் அத்தோடு இது மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது எனவே இதன் காரணமாக முடி வளரும்.