கனடா ஒட்டாவில் பெண் கொலை!

கனடாவின் ஒட்டாவாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

47 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒட்டாவாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள லேடி ஸ்லிப்பர் வேய் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக ஓட்டாவா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒட்டாவா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண் தொடர்பான ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எவ்வாறு இந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல்களையும் பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.