கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவாக இருப்பதால், மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலத்திரனியல் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளின் கையிருப்பைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் அவை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.