ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ் தற்போது 46 வயதாகும் நிலையில் உடல்நலக்குறைவால் அகால மரணமடைந்தார்.
பிஜிலி ரமேஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தவர் பிஜிலி ரமேஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் ஒரு தீவிரமான ரசிகராவார். இவர் இயக்குநர் நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.சென்னையைச் சேர்ந்த 46 வயதான பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இவரது இறுதி சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது. இவர் முதன் முதலாக யூடியூப் சேனல் ஒன்றின் பிராங்க் வீடியோக்கள் மூலமாக பிரபலமடைந்தவர். இதனையடுத்து இவருக்கு பல பட வாய்ப்புக்கள் கிடைத்தது.
நட்பே துணை, சிவப்பு மஞ்சள் பச்சை, கோமாளி, ஆடை போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது.
அவரது மருத்துவ செலவுக்காக அவரின் குடும்பம் நிதியுதவி வேண்டி இருந்தது. இந்த சூழலில் தான் அவர் இன்று உயிரிழந்துள்ளார். இது ரசிகர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.