இலங்கை வரவுள்ள தேர்தல் கண்காணிப்பு குழு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய (Europe) ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான முதலாவது குழு இலங்கை (Sri lanka) வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான மற்றொரு குழுவும் இலங்கை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு
அதேநேரம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர் (Commonwealth Election Superintendent) குழுவொன்றும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்கும் பணிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இந்த குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.