தண்ணீர் குடிக்கும் போது நாம் செய்யக்கூடாத சில தவறுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு நீர்ச்சத்து மிகவும் அவசியமாகும். நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருக்கவும், பல ஆரோக்கிய நன்மைகளை பெறவும், ஒருவர் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
போதுமான அளவு தண்ணீரை பருகுவது மட்டுமின்றி அதனை சரியான முறையில் குடிப்பது என்பது மிகவும் முக்கியமாகும்.
அந்த வகையில், நாம் தண்ணீர் குடிக்கும் போது சில தவறுகளை செய்கிறோம். அது எந்த மாதிரியான தவறுகள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்த தவறை செய்யாதீங்க
நாம் சாப்பிட உடனே தண்ணீர் குடித்தால் செரிமானத்தில் மோசமான விளைவு ஏற்படுத்தும். இதனால் அஜீரணம் மற்றும் வீக்கம் ஏற்படும். எனவே சாப்பிட்ட உடனே ஒருபோதும் தண்ணீர் குடிக்காதீர்கள்.
அது போன்று நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும், ஏனேனில் இவ்வாறு செய்வதால், மூட்டுகளில் வலி ஏற்படுவதுடன், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சனை ஏற்படுமாம்.
தண்ணீர் குடிக்கும் போது இடைவெளி விடாமல், அதாவது தொடர்ந்து வாய் எடுக்காமல் குடிப்பதும் உடம்பிற்கு தீங்கு ஏற்படுமாம். ஆகவே தண்ணீர் பருகும் போது வாய் வைத்து கொஞ்சம் கொஞ்சமாகவே குடிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக குடித்தால், அது சிறுநீரகத்தில் கூடுதல் அழுத்தத்தை உண்டாக்கும். பின்பு சிறுநீரகத்தின் வேலையும் அதிகரிப்பதால், இதனாலும் சில பிரச்சனைகள் ஏற்படும்.