மீண்டும் ஒரு கோட்ட ஆட்சிக்கு நாம் இடமளிக்க கூடாது!

கடந்த காலங்களில் கோட்டாபாய போன்ற கொடுங்கோல் ஆட்சிக்கு இனிமேல் நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை திருகோணமலையில் இடம் பெற்ற சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிக்கும் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்‌ஷ எனும் கொடுங்கோலன் நாட்டை ஆட்சி செய்து நாட்டை சின்னா பின்னமாக்கி சிறுபான்மை மக்கள் மாத்திரமன்றி நாட்டின் பொதுமக்கள் அனைவரும் வீதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்காக பணம் இருந்தும் அதனை நிவர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதைப் போன்ற ஒரு தலைவனை இனிமேல் இந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுக்க கூடாது என தெரிவித்தார்.

மேலும் நாட்டின் தலைவன் என்ற வகையில் நாடு வங்குரோத்து நிலையை அடையும் போது அதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய திறமை இல்லாத இலஞ்சம், ஊழல் இனவாதத்தை மாத்திரம் மையமாகக் கொண்டு ஆட்சி அமைத்த பல தலைவர்களினால் நாடு தற்போது சீரழிந்து போய் உள்ளது எனவும், இனிவரும் காலங்களிலாவது ஊழல் இல்லாத தலைவன் ஒருவனை தேர்ந்தெடுப்பதும் அவ்வாறு தேர்ந்தெடுக்கும் தலைவன் தனது ஆட்சி காலத்தில் முழுமையாக மக்களின் தேவைக்கு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னேற்றமான தலைவனாக இருக்க வேண்டும் குற்றவாளிகளை காப்பாற்றி தமது இருக்கையை தக்க வைத்துக் கொள்ளும் தலைவனாக இருக்கக் கூடாது எனவும் அவ்வாறான தலைவன் சஜித் பிரேமதாசா மாத்திரம் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும் சஜித் பிரேமதாச அவர்கள் நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் வெளிநாட்டு வருவாய்கள் மற்றும் பொருளாதாரம், வியாபாரங்கள் என்பன மென்மேலும் அபிவிருத்தி அடையும் எனவும் தனது தந்தை ரணசிங்க பிரேமதாசா போன்று பாமர மக்களிலிருந்து அவர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்காக உழைக்கும் ஒரு தலைவனாக இருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது