குழவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு!

கிரில்ல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிந்த பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம்.ஏ.கபுருபண்டா என்ற 90 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இவர் சுகயீனம் காரணமாக கிரிந்த பிரதேசத்திலிருந்து கிரில்ல பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றிற்கு மருந்துகளை எடுப்பதற்குச் சென்றுள்ளார்.

பின்னர், இவர் வைத்தியசாலையில் மருந்துகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது வீதியிலிருந்து குளவி கூடு கலைந்ததில் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.