இலங்கையில் (Sri Lanka) இந்த வருடம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6, 264 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31ஆம் திகதி வரை, மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்து 97,858 ஆக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்று இந்த எண்ணிக்கை பதின்மூன்று இலட்சத்து 14,122 ஆக அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை எட்டு இலட்சத்து 79,778 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் மற்றைய வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து18,080 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரி எண் பெற்றவர்கள்
இதேவேளை இந்த ஆண்டு (2024) ஜூலை 31 ஆம் திகதி வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை பதினொரு இலட்சத்து 82,210 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31,910 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஏற்கனவே ரி.ஐ.என் (TIN) எண்ணைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 45 இலட்சத்து 77,303 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.