அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்று வெள்ளிக்கிழமை (30) நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 304.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 295.38ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி 217.48 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 227.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய பவுண்டின் கொள்முதல் பெறுமதி 387.47 ருபாவாகவும், விற்பனை பெறுமதி 402.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.