இம் மாதத்தில் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதன்படி, இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,341,681 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் முதல் 25 நாட்களில் வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் 19.5% இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் எண்ணிக்கை 27,999 ஆக காணப்படுகிறது.
மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 15,918 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 10,068 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 9,162 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.