2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விதி மீறல் முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 29ஆம் திகதி வரை மொத்தம் 1482 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
சட்ட மீறல்கள்
இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான பெறப்பட்ட முறைப்பாடுகளாகும் அவற்றின் எண்ணிக்கை 1419 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 07 வன்முறைச் சம்பவங்கள் மற்றும் 56 ஏனைய முறைப்பாடுகளும்; பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.