நாளை தேர்த்திருவிழா காண இருக்கும் நல்லூரான்

பெயருக்கேற்றால் போல பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நாள் நாளை நடைபெறவுள்ளது.

இம்மாதம் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம், நாளை மறுதினம் தீர்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.

நல்லூரில் கொடியேற்றம் முதல் தீர்த்தத் திருவிழா வரை நடைபெறும் விழாக்களின் தத்துவங்கள் பண்டைய நூல்களில் இடம்பிடித்துள்ளன.

நல்லூர் கந்தன்
நாளை இடம்பெறவுள்ள தேர்த்திருவிழாவில் ஆறுமுகப் பெருமான் கஜாவல்லி, மஹாவல்லி சமேத ஸ்ரீ சண்முகப் பெருமானாக எழுந்தருவது வழமை.

நல்லூர்த் தேர் என்பது யாழ்ப்பாணத்தவர்களுக்கு மட்டுமன்றி தமிழர்கள் வாழும் இடமெங்கும் எழுச்சி மிக்க புனித நாளாக கருதப்படும்.
நல்லூர் கந்தனுக்கு அலங்கார கந்தன் என்ற சிறப்பு பெயர் உண்டு.

வடமாகாணத்தில் காணப்படும் முக்கிய முருகன் ஆலயங்களுக்கு விசேட பெயர்கள் கொண்டு அழைக்கப்படும்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் அபிஷேகக் கந்தன் எனவும், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் அன்னதானக் கந்தன் என்றும், நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அலங்காரக் கந்தன் என்றும் அழைக்கப்படும்.