மங்காத்தா படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்

அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஒரு பாடல் மட்டும் எடுக்கவேண்டியது பாக்கி என சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

மங்காத்தா
அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் முக்கியமான ஒன்று மங்காத்தா. இது அவருடைய 50வது திரைப்படமாகும். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி இருந்தார்.

இப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி திரைக்கு வந்தது. இன்றுடன் இப்படம் வெளிவந்து 13 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

சம்பளம்
இந்த நிலையில், ப்ளாக் பஸ்டர் மங்காத்தா திரைப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. முதல் முறையாக டபுள் டிஜிட்டல் அஜித் சம்பளம் வாங்கியதும் இப்படத்திற்காக தான் என்கின்றனர்.