திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வர்த்தகருமாக கருதப்படும் கரந்தெனிய சுத்தாவின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை (Special Task Force) அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எல்பிட்டிய (Elpitiya) காவல்துறை பிரிவிற்குட்பட்ட வதுரவில சந்தியில் விசேட அதிரடிப்படையினர் நேற்று (31) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைத்துப்பாக்கியுடன் 01 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “சேதவத்தை கசுன்” என்பவரின் உதவியாளர்கள் இருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் (30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கொழும்பு (Colombo) – கிராண்ட்பாஸ், சேதவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.