சரிபோதா சனிவாரம் 3 நாட்களில் செய்த வசூல்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஹீரோவாகி இருக்கும் நானி தெலுங்கில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

துணை இயக்குனராக பணிபுரிந்து அதன்பின் ஹீரோவாக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர் எனும் அந்தஸ்தை தெலுங்கு திரையுலகில் பிடித்துள்ளார். இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இவர் நடிப்பில் கடந்த 29ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சரிபோதா சனிவாரம். இப்படம் தெலுங்கை தவிர்த்து மற்ற மொழிகளில் Surya’s Saturday எனும் தலைப்பில் வெளிவந்தது. இப்படத்தை விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியிருந்தார்.

வசூல்
எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்த இப்படம் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி வரும் நாட்களில் சரிபோதா சனிவாரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்