தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த கோபி!

பாக்கியலட்சுமி
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.

இந்த தொடரில் ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட, நல்ல கதாபாத்திரம் என்ற சொல்லப்பட்ட வேடம் தான் ராமமூர்த்தி. கோபியின் தந்தையாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த அவரது கதாபாத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது.

தனது 80வது பிறந்தநாளை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடிய ராமமூர்த்தி அடுத்த நாள் இறந்தது போல் கதை அமைத்துள்ளனர்.

இன்றைய எபிசோட்

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மருத்துவர் சொன்னதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர். அதோடு கோபி தனது தந்தையின் உயிரிழப்பு செய்தி கேட்டு அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.

நேற்று கொண்டாட்டத்தால் பிடி அதிகமாகி இருக்கும், தண்ணீர் அடித்தால் சரியாகிவிடும் என தந்தையின் அருகில் செல்கிறார். பின் அவரது கையை பிடிக்கும் போது அப்பா இறந்தது கோபிக்கு தெரிய வர அதிர்ச்சியாகிறார்.

அந்த காட்சிகள் அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.