பொதுவாக அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய இறைச்சி வகைகளில் ஒன்று தான் கோழி இறைச்சி.
இந்த இறைச்சியை ஏழை எளியோர் கூட வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் விலைக் குறைவில் சந்தையில் விற்கப்படுகின்றது.
இது உலக அளவில் பெரும்பாலானோர் அதிகம் சாப்பிடக்கூடிய ஒரு இறைச்சியாகவும் பார்க்கப்படுகின்றது. மற்ற இறைச்சிகளை போன்று கோழியிலும் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அந்த வகையில், கோழி இறைச்சியில் புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இவ்வளவு ஆரோக்கியம் இருந்தாலும் தொடர்ந்து சாப்பிட்டால் ஒரு சில பக்க விளைவுகளும் உள்ளன. அதிலும் முக்கியமாக கோழி இறைச்சியில் உள்ள சில பாகங்கள் சாப்பிடுவதால் ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதன்படி, கோழி இறைச்சியில் மனிதர்கள் சாப்பிடக் கூடாத பாகங்கள் என்னென்ன? அதனை ஏன் சாப்பிடக் கூடாது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சிக்கனில் இந்த பாகம் சாப்பிடாதீங்க..
1. கோழி இறைச்சியில் இருக்கும் நுரையீரலில் நிறைய ஒட்டுண்ணிகள் இருக்கும். என்ன தான் கோழி இறைச்சியை கழுவினாலும் உயர் வெப்பநிலையில் வேக வைத்தாலும் அந்த பாக்ரீயாக்கள் அழியாது. மாறாக கோழி இறைச்சியின் நுரையீரலை சாப்பிடுவதால் பாக்ரீயாக்கள் நமது உடலுக்குள் சென்று வேறு விதமான நோய் தொற்றுக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
2. சிலர் கோழியில் இருக்கும் கழுத்து பகுதியை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பகுதி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனின் கோழியின் கழுத்தில் ஏகப்பட்ட நச்சுக்கள் மற்றும் கிருமிகள் அடங்கிய நிணநீர் முனைகள் உள்ளன. இதனை நாம் சாப்பிடும் போது புற்றுநோய் அபாயம் இருக்கும். முற்றிலும் தவிர்க்க வேண்டிய பகுதிகளில் இதுவும் ஒன்று.
3. சிக்கன் பிரியர்கள் பலரும் கோழியின் தலைப்பகுதியை அதிகமாக சாப்பிடுவார்கள். ஆனால் கோழியின் தலையில் மனித ஆரோக்கியத்தை அழிக்கும் சில ஆபத்தான பொருட்கள் உள்ளன. இது நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே தெரியாமல் கூட சிக்கன் தலை சாப்பிடாதீர்கள்.
4. கோழியின் குடலில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் உள்ளன. இது என்ன தான் கழுவினாலும் போகாது. சிக்கன் குடலையை உட்கொண்டால், அது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை அதிகரித்து நோய் அபாயத்தை குறைக்கும்.
5. சிக்கன் சாப்பிடும் பலர் அதன் தோலை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சிக்கன் தோலில் எந்தவிதமான சத்துக்களும் இல்லை. கோழி இறைச்சி தோலில் பல ஒட்டுண்ணிகள் மற்றும் கிருமிகள் இருக்கும். இதனால் இனி சிக்கன் வாங்கினால் தோலை நீக்கி விட்டு சமைத்து சாப்பிடவும்.