முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் எண்ணெய்!

பொதுவாக தற்போது பெண்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சினைகளில் தலைமுடி உதிர்வு முதல் இடத்தை பிடிக்கிறது.

இதனை சரிச் செய்ய என்ன தான் முயற்சிகள் செய்தாலும் சில சமயங்களில் மாத்திரமே பலன் அளிக்கிறது.

இதன்படி, நீண்ட மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெறுவதற்கு ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்திருப்போம்.

இது ஒரு நல்ல முயற்சி என்றாலும் அதனை பயன்படுத்துவதற்கு ஒரு சில நடைமுறைகள் உள்ளன.

அந்த வகையில் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தி, நல்ல வளர்ச்சியை கொடுக்கும் ரோஸ்மேரி எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெயை இரண்டு மேசைக்கரண்டி அளவு எடுத்து வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயையுடன் கலந்து கொள்ளவும்.
பின்னர் தலைமுடியை நன்றாக வாரி விட்டு கலந்து வைத்திருக்கும் எண்ணெயை உச்சந்தலையில் இருந்து அடி முடி வரை நன்றாக தடவவும்.
எண்ணெய் தடவிய பின்னர், இரு கைகளை மெதுவாக தலைக்குள் விட்டு மெதுவாக மசாஜ் செய்யவும்.
குறைந்தது ஒரு மணி நேரம் அல்லது ஒரே இரவிற்கு அப்படியே விடவும்.
காலையில் எழுந்து நன்றாக குளித்து விட்டால் தலைமுடி நன்கு வளரும்.
இதனை முடிந்தவரை வாரத்திற்கு இரண்டு முறையாவது செய்ய வேண்டும்.

கற்றாழை ஜெல்
இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லுடன் மூன்று அல்லது நான்கு சொட்டு ரோஸ்மேரி எண்ணெயை கலந்து கொள்ளவும்.
பின்னர் நன்றாக தலைமுடியை வாரி விட்டு கலந்து வைத்திருக்கும் கலவையை உச்சந்தலை முதல் அடி முடி வரை தடவவும் மற்றும் வேர்களுக்கும் நன்றாக படும்படி தடவினால் இன்னும் சிறந்த பலனை பெறலாம்.
சரியாக 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விட்டு பின்னர் தலைமுடியை சுத்தமான நீரால் அலசவும்.
இப்படி செய்து வந்தால் உச்சந்தலையில் இருக்கும் சூட்டை தணித்து முடியை வேகமாக வளர வைக்கும்.
தலைமுடி வரட்சி அல்லது சருமம் வரட்சி இருந்தால் அவைக்கு இதுவே சிறந்த மருந்து.