கண்களை குறி வைத்து தாக்கும் வைரஸ் தொற்று!

சமீபக் காலமாக பெரும்பாலான நாடுகளில் கனமழை, வெள்ளம் மற்றும் நீர் தேங்கி இருத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றது.

இதனால் அங்குள்ள மக்களுக்கு கான்ஜுன்க்டிவிட்டிஸ்( வெண்பட அலர்ச்சி) தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது.

இந்த நோய் தொற்று தொடரும் பருவமழை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக, பாக்ரீயாக்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இந்த காலத்தில் மக்கள் அவர்களின் உடலை ஆரோக்கியத்தில் முழு கவனம் எடுக்க வேண்டும். கான்ஜுன்க்டிவிடிஸ் என அழைக்கப்படும் வைரஸ் தொற்று மிக எளிதாக பரவுக் கூடியது.அத்துடன் நீண்ட நாட்கள் உயிர் வாழும்.

இப்படியான தொற்றுக்களை தடுக்க வேண்டும் என்றால் உங்களின் கைகளை அடிக்கடி கழுவுவது மற்றும் பொது இடத்தில் இருக்கும் போது கண்களை தொடுவது கூடாது.

அந்த வகையில், கண்களில் ஏற்படும் இப்படியான நோய் தொற்றுக்களை எப்படி கண்டயறிலாம்? அதனை எப்படி தடுக்கலாம்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

கண் நோய் பரவும் வழிமுறைகள்

1. பொது போக்குவரத்து சமயங்கள் சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கமாக பயணம் செய்தல்.

2. கண்களில் சிவத்தல், அரிப்பு, ஒட்டுதல் மற்றும் வலி உள்ளிட்ட பிரச்சினைகள்ட உடனடியாக கண் மருத்துவரை பார்க்க வேண்டும்.
3. கண்ணில் இருக்கும் வெண்படலம் இளஞ்சிவப்பு நிறமாக இருந்தால் இது கண் நோயாக இருக்க வாய்ப்பு உள்ளது.

4. கான்ஜுன்க்டிவிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் வீங்கியிருக்கும்.

5. தொற்றுக்கள் அதிகமாகினால் பார்வை இழக்கவும் வாய்ப்பு உள்ளது.

கண்களை ஆரோக்கியத்தை பேண சில வழிகள்

1. சுறுசுறுப்பான நடைபயிற்சி செய்வது அவசியம். இது உடல் முழுவதும் இரத்தயோட்டத்தை சீராக்கும். கண்ணி சுழற்சி சீராக இருக்கும். கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

2. கண்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை ஆக வேண்டும் என்றால் சைக்கிள் ஓட்டுதல் நல்ல பயிற்சியாக பார்க்கப்படுகின்றது. இது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தொற்றுக்களிலிருந்து எம்மை பாதுகாக்கிறது.

3. ஜம்பிங் ஜாக்ஸ் மற்றும் நடனம் போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் சிலர் ஈடுபடுவார்கள். இது இதய துடிப்பு முதல் கண்களின் ஆரோக்கியம் வரை காத்து கொள்கிறது. கண்ணில் இருக்கும் கண்ணீர் உற்பத்தியையும் ஊக்கப்படுத்துகிறது. இதனால் கண் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.

4. சீரான இடைவெளியில் சுமார் 20 வினாடிகள் வேகமாக கண்களை சிமிட்டவும். இது கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த பயிற்சியாக பார்க்கப்படுகின்றது. இயற்கையான கண்ணீரை பரப்புகிறது. கண்ணில் தொற்றுக்கள் ஏற்படுவது இதனால் குறைவாக இருக்கும்.
5. அருகிலுள்ள ஒரு பொருளின் மீது சில வினாடிகள் கவனம் செலுத்தி விட்டு பின்னர் உடனே உங்களின் கவனத்தை தொலைவில் உள்ளவற்றில் காட்டுங்கள். இது பயிற்சியால் கண்களின் நெகிழ்வுத்தன்மையை மேம்படும்.

6. உள்ளங்கைகள் இரண்டையும் சூடாகும் வரை ஒன்றாக தேய்த்த பின்னர் உங்கள் கண்களை மூடி அதன் மீது மெதுவாக கைகளை வைக்கவும். இவ்வாறு பாமிங் செய்தால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி தளர்வு பெறும். கண் தசைகள் தளர்ந்து பிரகாசமாக காட்சிக் கொடுக்கும்.