கனடாவில் பயன்படுத்தப்படும் சில வகை அடுப்பு குறித்து எச்சரிக்கை!

கனடாவில் சம்சுங் ரக இலத்திரனியல் அடுப்புக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அடுப்பு வகையை பயன்படுத்தும் மக்கள் தீ விபத்துக்கு உள்ளாவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கனடாவில் சில அடுப்பு தீ பற்றி கொண்டதில் காயமடைந்துள்ளனர்.

சுகாதார நிறுவனம் குறித்த அடுப்பு வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 326250 அடுப்புக்கள் இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அடுப்புக்களின் எரியும் பகுதி தானாக இயங்குவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே இந்த அடுப்பு வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீ பற்றிக் கொள்வதனை தவிர்க்கும் நோக்கில் சம்சுங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விசேட கருவிகளை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுப்புக்கள் தானாக தீப்பற்றி கொண்ட 57 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

விபத்துக்கள் காரணமாக ஏழு பேர் இதுவரையில் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.