லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயுசிலிண்டர்களின் தற்போதைய விலைகள் பின்வருமாறு அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ எரிவாயுசிலிண்டரின் விலை 3,680ரூபா எனவும், 05 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,477 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறுகையில்,

செப்டம்பர் மாதத்துக்கான உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்

லிட்ரோ இந்த ஆண்டு இதுவரை நான்கு தொடர்ச்சியான விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளது,

மேலும் 12.5 கிலோ சிலிண்டரின் விலை 2,892 ரூபா மற்றும் 5 கிலோ சிலிண்டர் 1,198 ரூபா என்றும் அநிவிக்கப்பட்டது.