கோவிட் தடுப்பூசிகள் குறித்து கனேடிய அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கோவிட் தடுப்பூசி பயன்பாடு தொடர்பில் கனடிய அரசாங்கம் மாகாணங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பழைய கோவிட் 19 தடுப்பூசிகளை அழித்து விடுமாறு அறிவித்துள்ளது.

கனடிய சுகாதாரத் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

புதிய தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றின் புதிய திரிபுகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மைய நாட்களாக நாட்டில் கோவிட் 19 பெருந்தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கழிவு நீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து மாகாணங்களிலும் பழைய தடுப்பூசிகளை அழித்து விடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது