தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகளை நாம் பெற முடியும். அவை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆயுர்வேதத்தில் மிகவும் மதிப்புமிக்க பழமாக இருப்பது நெல்லிக்காய் ஆகும். வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து என பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வைட்டமின் சி சத்துக்களை அதிகம் கொண்ட நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம்மை நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது.
மூளை வளர்ச்சிக்கு உதவி செய்வதுடன், ஞாபக சக்தியையும் கூர்மையாக்குகின்றது.
நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. ஆதலால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த ஒரு கனியாகும்.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும பிரச்சனைகளை நீக்கி சருமத்தை பாதுகாத்து முகப்பொலிவை அதிகரிக்கவும் செய்கின்றது.
செரிமானத்தை சீராக வைத்து, அல்சர் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவுகின்றது.
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுத்து கண்பார்பையை மேம்படுத்துவதற்கு உதவுகின்றது.
தலைமுடி உதிர்வதை தடுத்து, தலைமுடி நன்கு வளர்வதற்கு உதவி செய்கின்றது. மேலும் நெல்லிக்காயில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தி, எலும்பு முறிவிலிருந்தும் பாதுகாக்கின்றது.
ரத்தத்தை சுத்திகரித்து, நச்சுக்களை வெளியேற்றுவதுடன், வளர்சிதை மாற்றத்தினையும் அதிகரித்து உடல் எடையையும் குறைக்க உதவி செய்கின்றது.