தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை மாற்ற இயலாது!சுமந்திரன்

தமிழரசுக்கட்சி (ITAK) தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவை ஒரு போதும் மாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரில் சஜித் பிரேமதாஸவுடைய (Sajith Premadasa) நிலைப்பாடுதான் தான் எங்களுக்கு அண்மித்ததாக இருந்ததாலேயே அவருக்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக்கட்சியின் தீர்மானம் குறித்து ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சஜித் பிரேமதாஸவுடன் ஒரு பேரம் பேசல் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தலைவர் மாவை சேனாதிராஐாவுக்கும் (Mavai senathirajah) தெரியும்.

தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் மற்றுமொரு மத்தியகுழுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

சஜித் பிரேமதாஸ நாங்கள் தெரிவு செய்துள்ளோம் என்பதற்காக அநுரவை முழுமையாக எதிர்க்கின்றோம் என கூற முடியாது.

பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனமானது மிகவும் மலினத்தனமானது. மேலும், இது எல்லா கட்சிகளிலும் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.