தினமும் ஒரு மாதுளம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மாதுளை
மாதுளை பழத்தில் பல ஊட்டச்சத்துகள் உள்ளதால் இதை சாப்பிடுவது நம் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் தரும் என்பது எல்லாருக்குமே தெரிந்த விஷயம்.

மாதுளை பழத்தில் உள்ள வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு வீக்கத்தை குறைத்து இதய நலனை பாதுகாக்கிறது.

மாதுளையில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நோய் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கின்றது.

இதில் உள்ள பாலிஃபெனால்கள் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி, இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்களின் அபாயத்தையம் குறைக்கின்றது.

மாதுளம் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதுடன், புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கின்றது. குறிப்பாக புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கின்றது.

மாதுளையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீர்குலைத்து, மலச்சிக்கலைத் தடுத்து, வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கு உதவுகின்றது.

இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது எலும்புகளை வலுப்படுத்தி, எலும்பு முறுவுகள் மற்றும் எலும்பு தேய்மான பிரச்சனையை தடுக்கின்றது.

மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் செல்களை பாதிக்கும் இலவச ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, இளமையாகவும், பொலிவாகவும் வைக்க உதவுகின்றது.

மேலும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கவும் செய்கின்றது.