ரஷ்யா எரிபொருள் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யா எரிபொருள் கிடங்கு ஒன்றின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவும் உக்ரைனும் அதன் எல்லைப் பகுதிகளில் ஒரே இரவில் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமான தாக்குதல்
உக்ரைனிய இராணுவம், பலம் வாய்ந்த ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவில் எரிபொருள் சேமிப்பு தளத்தைத் தாக்கியுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக பல பகுதிகளில் தீ பரவியுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.