வவுனியாவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக் குறிகள் மீட்பு!

வவுனியா மகாறம்பைக்குளம் 2ம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த 15இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான மரங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வவுனியா (DCDB) மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றை சோதனை செய்தபோதே இவை மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர அவர்களின் உத்தரவில், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேரா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு (DCDB) பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண தலைமையில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இக்குற்றச்சாட்டில் மரக்காலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.