தங்கத்தின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில், இன்றைய (10) நாளுக்கான நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 752,573 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, 24 கரட் தங்க கிராம் 26,550 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் 212,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,340 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் 194,700 ரூபாவாக பதிவாகியுள்ள அதேசமயம், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,240 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் 185,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.