இணையத்தின் ஊடாக பல மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் 13 சீன(china) பிரஜைகளை இன்று (12ஆம் திகதி) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களில் இரண்டு சீன பெண்களும் அடங்குவதுடன் அவர்கள் அனைவரும் இன்று கொழும்பு(colombo) பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள்
பொரளை, கோதமி வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சீன சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மோசடிக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சீனப் பெண்களும் 24 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும், ஏனைய சீன சந்தேக நபர்கள் 30 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.