வாக்களிப்பின் போது அலைபேசிகளுக்கு தடை!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த தீர்மானமானது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் மற்றும் வாக்காளர்களுக்கும் செல்லுபடியாகும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.