பால்மாவிற்கு 200 மில்லியன் ஒதுக்கீடு!

இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான மில்கோ நிறுவனத்தின் நாளாந்த உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதையடுத்து, தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள 200,000 மெற்றிக் தொன் பால்மாவை கொள்வனவு செய்வதற்கு, 200 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

ச.தொ.ச ஊடாக பால்மா விற்பனை
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் என்ற ரீதியில் தானும் இணைந்து நேற்று முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இணங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ச.தொ.ச ஊடாக ஹைலண்ட் பால்மாவை விற்பனை செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அதேவேளை மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஹைலண்ட் பால் மாவின் விலையும் கடந்த வாரம் முதல் 400 கிராம் பாக்கெட் ஒன்றின் விலை 75 ரூபாவாலும் 01 கிலோ பக்கற் ஒன்றின் விலை 190 ரூபாவாலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.