களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கிரிபத்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மற்றும் இலத்திரனியல் தராசு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.