காணமல் போனவர்கள் தொடர்பில் யாழில் ரணில் வெளியிட்டுள்ள செய்தி!

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (TRC) ஆகியவை தமது அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இன்று தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு காண்பதற்கு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் ஊடாக செயற்படுவார் என யாழ்ப்பாணம்(jaffna) நாவாந்துறையில் இன்று(14) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பின்தங்கிப்போய்விடும் வடக்கு
வடக்கின் பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது எனவும், அபிவிருத்தியும் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இல்லையேல் ஏனைய மாகாணங்கள் அபிவிருத்தியில் முன்னோக்கி செல்லும் போது வடக்கு பின்தங்கிவிடும் எனவும் வடக்கின் அரசியல் பிரச்சினைகளை மட்டுமன்றி அபிவிருத்தி பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களை தான் அச்சுறுத்தியதாக குறிப்பிட்ட அநுரகுமார திஸாநாயக்கவை(anura kumara dissanayaka) சுமந்திரன்(m.a.sumanthiran) பாதுகாத்தாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.