வெளிநாடொன்றில் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை!

சீனாவில் (China) வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது எல்லையை உயா்த்துவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து சீனாவின் அரச ஊடகங்கள் நேற்று (13) செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது எல்லையை அதிகரிக்க சீன அரசு முடிவு செய்துள்ளதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கம் இது நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சராசரி ஆயுள் அதிகரிப்பு
அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி, ஆண்களுக்கான ஓய்வு வயது எல்லை 63ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான வயது எல்லை வேலையைப் பொறுத்து 55 முதல் 58 வரையிலுமாகவும் அதிகரிக்கப்படும் என்று ஊடகங்கள் தெரிவித்தன

கடந்த 1949இல் 36 வயதாக இருந்த சீனா்களின் சராசரி ஆயுள் தற்போது 78 வயதாக அதிகரித்துள்ளது

ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை
எனினும், இந்த 75 ஆண்டுகளாக ஓய்வு பெறுவதற்கான வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 (உடலுழைப்புத் தொழிலுக்கு 50 வயது) என்ற நிலையில் மாற்றமில்லாமல் இருந்துவருகிறது.

இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஓய்வு வயது எல்லையை அதிகரிப்பது குறித்து என்று நீண்டகாலமாகவே பரிசீலிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.