ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்பொழுது தேர்தல் பந்தயம் கட்டுவது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீடுகள், வாகனங்கள், பணம் உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான சொத்துக்களை சிலர் தேர்தல் பந்தயமாக வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர நெடுஞ்சாலையில் தலையை தொங்கவிட்டு மணிக்கணக்கில் நிற்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அதிகமான வர்த்தகர்கள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் ரத்தின வியாபாரிகள் மற்றும் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பந்தயம் கட்டியவர்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.