நீரிழிவு நோயாளர்கள் சாக்லெட் சாப்பிடலமா?

நீரிழிவு நோய் என்பது சரி செய்ய முடியாத உடல்நலப் பிரச்சனையாகும். ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க, நாம் அனைவரும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த நோய் பொதுவாக நமது பழக்கவழக்கம் உணவு முறையால் வரக்கூடியதாகும். இதை தடுக்க ஒவ்வொருவரும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தில்அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நோய் தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரு நோயாகும்.

இது ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை இது சேதப்படுத்துவதால் “ஸ்ட்ரோக்’ என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கும். எனவ இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாக்லெட் உண்ணலாமா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. நமக்கு ஏற்கனவே வேறு ஒரு நோய் இருக்கும் போது நாம் சிகிச்சை எடுத்துக்கொள்ள செல்ல போகும் போது தான் இந்த நோய் இருப்பது நமக்கு தெரியவரும்.

சாப்பிடுவதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 60 முதல் 110 மி.கி., ஆக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின், சர்க்கரை அளவு 80 முதல் 140க்குள் இருக்க வேண்டும். இதை விட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படுகிறது.

சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி.கி., வரை இருந்தால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கிய காரணம் இதுவாகும்.

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு என்றால் அது சாக்லெட் தான்.இதை சக்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்பது பலருக்கும் தெரியாது. இந்த சாக்லெடில் மூன்று வகை சாக்லெட்கள் உள்ளது.

இந்த மூன்றில் டார்க் சாக்லெட்டில் 70-85 சதவிகிதம் கோக்கோ சாலிட்ஸ், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மிகக்குறைந்த அளவு சர்க்கரை உள்ளது. மில்க் சாக்லெட்டில் 35-சதவிகிதம் கொக்கோ சாலிட்ஸ், கொக்கோ வெண்ணெய், பால், சர்க்கரை ஆகியவை உள்ளன.

ஒயிட் சாக்லெட்டில் கொக்கோ சாலிட்ஸ் கிடையாது. இதில் கொக்கோ வெண்ணெய், பால் மற்றும் சர்க்கரை மட்டுமே உள்ளது.இந்த மூன்று வகை சாக்லெட்டில் சக்கரை நோயாளிகள் டார்க் சாக்லெட்டை உண்ணலாம்.

இது சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் முதல் பல வகை நோய்களை தடுக்கும். இதில் உள்ள பாலிபெனால்ஸ், பிளாவனால்ஸ், தியோபுரோமின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்ஸ், நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரித்து ரத்த நாளங்களை தளர்த்தி, ரத்த அழுத்தத்தை குறைக்க துணைபுரியும்.

டார்க் சாக்லெட்டில் உள்ள கொக்கோவில் பாஸ்பரஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இது தவிர இது இன்சுலின் உற்பத்தியை அதிக்கிறது.

நமது செல்களில் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது. எனவே சக்கரை நோயாளிகள் டார்க் சாக்லெட் ஒரு நாளைக்கு 20 கிராம் வரை சாப்பிடலாம் என கண்டறியப்பட்டுள்ளது.கேரமல் கலந்த சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் பால் சாக்லெட்டுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.