இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து அமெரிக்க தூதுவர் வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு அமெரிக்கா (US) எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவர் தமது எக்ஸ் (X) தள பதிவில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய மிக முக்கியமான நடவடிக்கையாகும் எனவும் குறித்த பதிவில் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் ஜனநாயகத்திற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை விட வேறு எந்த செயல்முறையும் அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வாக்காளர்கள் தங்கள் நாட்டை எதிர்காலத்தில் வழிநடத்தும் வேட்பாளருடன் நெருக்கமாக பணியாற்றுவதை அமெரிக்கா அவதானிக்கின்றது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளமை ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.