மட்டக்களப்பில் பொது மக்கள் எதிர்நோக்கு பிரச்சினைகளை வெளிக்காட்டுவதற்கான விஸ் அக்ட் (VisAct) செயலியானது டிரிம் ஸ்பேஸ் அக்கடமியின் பணிப்பாளர் என். கிசோத் தலைமையில் கல்லடி கிறின்காடன் விடுதியில்
இன்று (13) திகதி இடம் பெற்றது.
மக்கள் மத்தியில் சமூக பொறுப்பு மற்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இச் செயலி யூஸ்எயிட் (USAID) மற்றும் குளோபல் கொமியுனிட்டி (Global communities) நிறுவனங்களுடன் இணைத்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
முதற்கட்டமாக இச் செயலி மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன்,
மக்கள் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக எதிர் நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அவற்றுக்கான தீர்வுகளை வழங்கக்கூடிய உரிய அதிகாரி அல்லது பொறுப்பான நபர்களுக்கு துரித கதியில் தெரிவிப்பதற்கான ஊடகமாகவே இச் செயலி செயற்படவுள்ளது.
அரச உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் இணைந்து இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், வைத்திய அதிகாரிகள், வலய கல்வி அதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபை உயர் அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.