யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோவிற்சந்தை பகுதியில் சில மாதங்களுக்கு முன் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிககப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கோமா நிலைக்கு சென்றமையினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்றையதினம் (15-09-2024) வீட்டில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் துன்னாலை பகுதியைச் சேர்ந்த 28 வயதான முருகையா நிரோஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.