ட்ரம்ப் மீது துப்பாக்கிசூடு!

அமெரிக்காவில்குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டமை அங்கு பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா கோல்ப் கிளப்பில் கோல் விளையாட டிரம்ப் சென்றபோதே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றது. இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார்
மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

ஏற்கனவே, பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர்,எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், புளோரிடாவின் வெஸ்ட் பால்ம் பீச்சில் உள்ள டிரம்பின் கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2வது தாக்குதல் முயற்சி
இரு மாதங்களில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட 2வது தாக்குதல் முயற்சி இது என்பதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும், அவர் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.