வீடொன்றின் கட்டிலுக்கு அடியில் 10 வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெய்யந்தர அதபத்துகந்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அதபத்துகந்த, டீயெந்தர பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றையதினம்(17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, வீடொன்றின் படுக்கையறையில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு வாள் இரண்டரை அடி நீளம் கொண்டதுடன், சந்தேகநபரிடம் இருந்து பத்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.