புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?

எமது முன்னோர் புரட்டாசி மாதத்தை தெய்வத்திற்கு உரிய மாதமாக பார்க்கிறார்கள்.

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி என்பதால் அசைவ உணவுகளுக்கு இடம் இருக்காது. மாறாக சைவ உணவுகளை தான் மாதம் முழுவதும் சாப்பிட வேண்டும்.

இப்படி இருந்து பெருமாளுக்கு வழிபாடு செய்வதால் வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என இன்றும் நம்பப்படுகின்றது.

இந்த சாஸ்த்திரத்தை காலங்காலமாக இந்துக்கள் பின்பற்றி வருகிறார்கள். இதற்கு சாஸ்த்திரம் ரீதியாக காரணம் இருப்பது போல் ஒரு அறிவியல் காரணமாக இருக்கின்றது.

அந்த வகையில் புரட்டாசி மாதம் அசைவ உணவுகளை தவிர்ப்பதற்கான காரணத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?
பொதுவாக புரட்டாசி மாதத்தில் கோவில்களிலும் சரி, காய்கறி கடைகளிலும் சரி கூட்டம் அலைமோதும். அதே சமயம் அசைவ உணவு கடைக்களில் அதிகமாக கூட்டம் இருக்காது. பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் வீடுகள் முழுவதும் பெருக்கி, சுத்தமாக இருக்கும். புரட்டாசி மாதம் காலை முதல் மாலை வரை வெயில் சூடு தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். அதே போல் மாலை மற்றும் இரவு வேளைகளில் குளிர் நம்மை உறைய வைக்கும்.

இப்படி மழை, வெயில் என இரண்டிலும் மனிதர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்களோ, அதே போல் விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. அத்துடன் புரட்டாசி மாதம் தொற்றுக்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கு நோய்கள் வரும்.

இப்படியான காலநிலை மாற்றம் இருக்கும் பொழுது அசைவ உணவுகள் சாப்பிட்டால் செரிமான கோளாறு, நோய் தொற்றுக்களின் தாக்கம் ஏற்படலாம். இதனால் தான் புரட்டாசி மாதம் அசைவ உணவுகளை யாரும் பெரிதாக விரும்பமாட்டார்கள்.

சாஸ்த்திரம் என்ன சொல்கிறது?
புரட்டாசி மாதத்தில், புதனை ஆளும் சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்வார். புதனின் நட்பு கிரகம் சனிபகவான் என்பதாலும் புதன் மகா விஷ்ணுவின் சொரூபம் என்பதாலும் புதன் பெருமாளுக்கு உரிய கிரகமாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் புதன் கிரகம் ஒரு சைவ கிரகமாக பார்க்கப்படுகின்றது. அவர் ஆளும் இந்த காலப்பகுதியில் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது எனக் கூறப்படுகின்றது.

துளசி தீர்த்தம் குடிப்பது ஏன்?
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால் கோயில்களில் பெருமாளுக்கு அதிகமான பூஜைகள் செய்வார்கள். அப்போது துளசி தீர்த்தம் சரளமாக கிடைக்கும். அதே போல் துளசி தீர்த்தம் வாங்கி குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் மற்றும் தொற்றுக்கள் வராமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.