முகத்தில் இந்த பொருட்களை மறந்தும் கூட பயன்படுத்தாதீர்கள்!

பொதுவாக பெண்கள் தங்களின் அழகை பார்த்து கொள்ள பெரிதும் விருப்பம் காட்டுவார்கள்.

இதனால் சமூக ஊடகங்களில் பார்க்ககூடிய அழகு குறிப்புகள் மற்றும் இரசாயன பொருட்கள் உள்ளிட்டவைகளை முகத்திற்கு அப்ளை செய்து பார்ப்பார்கள்.

இப்படி பயன்படுத்தும் பொருட்கள் தோல் பலவிதமான பிரச்சினைகளை உண்டு பண்ணலாம். அதனால் அழகு குறிப்பு பார்க்கும் போது அவை உங்களுக்கு பொருந்துமா? பொருந்தாதா? என ஆராய்ந்த பின்னரே முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

அந்த வகையில் மறந்தும் பயன்படுத்தக் கூடாதபொருட்கள் என்னென்ன? அவற்றினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன? என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1.பேஸ்ட்
பல் துலக்கும் பேஸ்டை முகத்தில் லெமனுடன் சேர்த்து அப்ளை செய்து வந்தால் முகம் வெள்ளையாக மாறும் என நாம் சமூக ஊடகங்களில் பார்த்திருப்போம். ஆனால் இந்த குறிப்பு உங்கள் முகத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும். உதாரணமாக பருக்கள் , கரும்புள்ளிகள், தடிப்பு, வீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் தோன்றலாம்.

2. சமையல் எண்ணெய்கள்
தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களை எக்காரணம் கொண்டும் முகத்தில் நேரடியாக அப்ளை செய்யக் கூடாது. இந்த வகை எண்ணெய்கள் உங்கள் முகத்திற்கு ஒத்துப் போகுதா? என்பதனை ஆராய்ந்த பின்னர் பயன்படுத்துங்கள். ஏனென்றால் எண்ணெய்கள் தோலில் துளைகளை அடைத்து முகப்பருக்களை உண்டாக்கும். சில வேளைகளில் சருமத்தில் எறிச்சலும் உண்டாகலாம்.

3. வாசனை திரவியங்கள் (Body lotion)
சிலருக்கு முகத்தில் Body lotion அப்ளை செய்யும் பழக்கம் இருக்கும். Body lotion கைகள், கால்கள், தொடைகள் மற்றும் முதுகு போன்ற உடலின் அடர்த்தியான தோல் உள்ள இடங்களில் அப்ளை செய்வதற்காக தயாரிக்கப்பட்டவை. இவற்றை முகத்தில் அப்ளை செய்யும் போது வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் முகத்திற்கு க்ளென்சர்கள், மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சன்ஸ்கிரீன்கள் போன்றவை தான் பயன்படுத்த வேண்டும்.